ஜூன் 30ஆம் தேதி ராகு நட்சத்திர பெயர்ச்சி நடக்கிறது. இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு துன்பத்தை உண்டாக்கும். 

 

ராகு நட்சத்திர பெயர்ச்சி

ஜோதிட ரீதியாக, 9 கிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமாக ராகு காணப்பபுடுகின்றது. ராகுவின் ஒவ்வொரு அசைவும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில், ராகு பெயர்ச்சி ஜூன் 30ஆம் தேதி தனது நட்சத்திரத்தை மாற்ற இருக்கிறது.

ராகு பகவான் ஜூன் 30ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறது. இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் 2027 ஏப்ரல் வரை இருப்பார்.

இந்த பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிட்ட மாற்றங்களை உண்டாக்கும். அந்த ராசிகள் பற்றி பதிவில் பார்க்கலாம். 

ராகு நட்சத்திர பெயர்ச்சி - அடுத்த மாதத்தில் இருந்து இந்த ராசிகள் ஜாக்கிரதை | Rahu Transit Zodiac Signs Should Attention Money

 ரிஷபம்

  • ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் செலவுகள் அதிகரிப்பு, பண இழப்பு வாய்ப்பு, வேலை மற்றும் தொழிலில் தடைகள் போன்ற சவால்களை சந்திக்கலாம்.
  • குடும்பத்தில் குழப்பங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
  • பணம் மற்றும் முக்கிய முடிவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • அதே நேரத்தில், நீண்ட நாட்களாக இருந்து வந்த சில சிறிய பிரச்சினைகள் தீரும் வாய்ப்பும் உள்ளது.

சிம்மம்

  • ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பணியிடத்தில் சவால்கள், தாமதங்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  • பேச்சு, நடத்தை மற்றும் முக்கிய முடிவுகளில் கவனம் தேவை.
  • நிதி சிக்கல்கள் மற்றும் பழைய கடன் தொடர்பான பிரச்சினைகளும் உருவாக வாய்ப்புள்ளது.

விருட்சிகம்

  • ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மன அழுத்தம், மனக் குழப்பம் மற்றும் வேலைகளில் தாமதம் ஏற்படலாம்.
  • நிதி இழப்பு வாய்ப்பு இருப்பதால் பண விஷயங்களிலும் முதலீடுகளிலும் கவனம் தேவை.
  • குடும்பத்தினரின் உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரிக்கலாம்.
  • தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியாக செயல்படுவது நல்லது.