ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியையும், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.இந்த மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அந்த வகையில், ஜூலை 20 ஆம் தேதி சூரியன் பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி என்பதால், இந்த பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

பூச நட்சத்திரத்தில் சூரியன்: அதிர்ஷ்டத்தை முழுதாக அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Nakshatra Transit On 20 July Who Get Luck

 

சூரியனுக்கும் சனிக்கும் பகை உறவு இருப்பதாகக் கருதப்படுவதால், சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் இருந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் நிதி வளர்ச்சி கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த பெயர்ச்சியால் தொழில் ரீதியாகவும், நிதி நீதியாகவும் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 

மேஷம்

பூச நட்சத்திரத்தில் சூரியன்: அதிர்ஷ்டத்தை முழுதாக அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Nakshatra Transit On 20 July Who Get Luck

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகலாம். குடும்பத்தில் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.

குறிப்பாக தந்தையின் உதவியால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கியமான காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.

மிதுனம்

பூச நட்சத்திரத்தில் சூரியன்: அதிர்ஷ்டத்தை முழுதாக அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Nakshatra Transit On 20 July Who Get Luck

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பல நன்மைகளை வழங்கும். உங்கள் பேச்சுத் திறன் மற்றவர்களை எளிதில் கவரும்.

நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். திடீர் பண வரவுகள் மகிழ்ச்சியைத் தரும். பரம்பரை சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்தக் காலத்தில் செய்யும் புதிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலும் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை கொடுக்கப்போகின்றது. 

சிம்மம்

பூச நட்சத்திரத்தில் சூரியன்: அதிர்ஷ்டத்தை முழுதாக அனுபவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! | Sun Nakshatra Transit On 20 July Who Get Luck

சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் மதிப்பும் நற்பெயரும் உயரும்.

மேலதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால் முக்கியமான பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த உடல்நலப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் உங்கள் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.