அந்தமான்- நிகோபார் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 12பேருடன் வருகை தந்த மர்ம படகை கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளதாவது, அந்தமான்- நிகோபார் தீவுகள் அருகே உள்ள கடல் பகுதியில் கடலோர காவல்படை, ஹெலிகொப்டர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தது.

இதன்போது சந்தேகப்படும்படி படகு ஒன்று வருவதை  அவதானித்து, கடலோர காவல்படைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடலோர காவல்படையினர் கப்பலில் சென்று அந்த படகையும், அதிலிருந்த 12 மியன்மார் நாட்டினரையும் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகை கைப்பற்றிய கடலோர காவல்படையினர், அதில் வருகை தந்த 12பேரிடமும் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.