நடிகை வரலட்சுமி தன் கணவருடன் முதல்வர் விஜயை சந்தித்துள்ளார். குறித்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வரலட்சுமி பதிவு

முதல்வர் விஜயுடனான சந்திப்பு குறித்து வரலட்சுமி வெளியிட்ட பதிவில், “ஒருவேளை மக்கள் 100 வித்தியாசமான விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இறுதியில் சி. ஜோசப் விஜய் என்பவர் நம் முதல்வர்தான். விமர்சிப்பது மிக எளிதானது.

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல் | Ctor Varalakshmi Met Cm Vijay Photos Viral

ஆனால், தன் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தைரியம், மன உறுதி, தமிழக மக்களின் பேரன்பு ஆகியவற்றைப் பெற்றால்தான் சாத்தியம்.வார்த்தைகளைவிட செய்லே வலிமை மிக்கது.

இந்த பதவியின் பொறுப்பிற்புகு மரியாதை அளிப்போம். எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு, காலமே உண்மையை வெளிக்கொண்டு வரும்.அதுவரை, அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க, கொஞ்சம் பொறுமையுடனும், மரியாதையுடனும், ஊக்கத்துடனும் இருப்போம்.

“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல் | Ctor Varalakshmi Met Cm Vijay Photos Viral

நான் பெண்கள் நலன் சார்ந்து சில விஷயங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். ஐ லவ் யூ சார்... என்றும், என்றும் ‘விஜய் வெறியன்’தான். எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி அன்பைப் பகிர்ந்ததற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில்  கவனம் ஈர்த்து வருகின்றது.

முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை வரலட்சுமி அவருடன் இணைந்து சர்க்கார் திரைப்படத்தில் முக்கியமான அரசியல் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.