காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான கடல் வகை உணவுகளில் ஒன்றான நெத்திலி மீன் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாகும்.
மீன் மட்டுமின்றி நெத்திலி கருவாடும் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் நெத்திலி மீனில் அதிக முள் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் தாராளமாக சாப்பிட ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் காரசாரமான நெத்திலி மீன் தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு பற்கள் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
சின்ன வெங்காயம் - 20 முதல் 25
பழுத்த தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு பற்கள் - 10
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலாவிலிருந்து எண்ணெய் தனியாக பிரிந்த பின்பு, புளி கரைசலை ஊற்றி சற்று கொதிக்க வைக்கவும். குழம்பு கெட்டியான பதத்திற்கு வந்ததும், நெத்திலி மீனை சேர்த்து கலந்துவிடவும்.
சிறிதளவு எண்ணெய் சேர்த்து மூடி வைத்து 7 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் நெத்திலி மீன் தொக்கு தயார். கடைசியாக சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

