மீனா
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போதும் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. சமீபத்தில் திரிஷ்யம் 3 படத்திலும் நடித்துள்ளார் மீனா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனா, தன்னுடைய தோழிகளும் நடிகைகளுடனும் சேர்ந்து அரட்டையடிப்பது வழக்கமாக வைத்து வருகிறார். அதிலும் அவர்களுடன் நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி மீனாவிடம், இந்த ஜெனரேஷனில் அழகான ஹீரோ யார்? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
அதற்கு மீனா, எனக்கு நியாபகத்துக்கு வரவில்லை, என்னுடைய ஆள் அஜித்தான் நியாபகத்துக்கு வருகிறார். இப்போதும் கூட அவர் செம்ம அழகாக இருக்கிறார் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.
