ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் அறிவுத்திறன், தகவல் தொடர்பு, சிந்தனை, கற்றல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது.

புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் சிந்தனை முறை, பேசும் விதம், தகவல் பரிமாற்றம், வணிக முடிவுகள் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் பிரதிபலிக்கும் என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர்.

கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது! | Mercury Transit In Cancer Who Get Huge Money Luck

 

அதனால் புதனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05-ஆம் தேதி புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது.

குறித்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டாலும், குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிகப்படியான அதிர்ஷ்டம், முன்னேற்றம், வெற்றிகளை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புதன் ஆசியால் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 

மிதுனம்

கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது! | Mercury Transit In Cancer Who Get Huge Money Luck

புதன் இந்த ராசியின் அதிபதி என்பதால், இந்தப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தடைபட்ட வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியை கொடுக்கும்.

பணியிடத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து, வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் இவர்களின் பேச்சுத் திறன் மேம்பட்டு, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.

கன்னி

கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது! | Mercury Transit In Cancer Who Get Huge Money Luck

புதன் கன்னி ராசியின் அதிபதி என்பதால், இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.

வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள், தொழில்முறை தொடர்புகள் உருவாகும். வருமானம் உயரும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். 

தனிப்பட்ட வாழ்க்கையில்  அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நீண்டகாலம் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதன் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும்.

துலாம்

கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது! | Mercury Transit In Cancer Who Get Huge Money Luck

ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

புதிய பொறுப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சமூக மரியாதை உயரும். பெற்றோர் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்ல உறவு உருவாகும். இனிமையான பேச்சால் உறவுகள் வலுவடையும்.

வெளிநாட்டு தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கூடுதல் வருமான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது சிறந்த காலமாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.