Vijay - Sangeeta Divorce case : செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பானதாகக் கூறப்படும் விவாகரத்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு  

விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த குடும்ப நல நீதிமன்றம், இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முதலில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆனால், அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

ஜூன் 15ஆம் தேதியன்றும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் பிரபலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today

அந்த கோரிக்கையைத் தொடர்ந்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. காணொளி காட்சி வாயிலாக இருவரும் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை வழங்குவதற்காக, அதற்கான இணையதள இணைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை - காணொளி மூலம் ஆஜராக வாய்ப்பு | Cm Vijay Sangeetha Divorce Case Hearing Today