Why Oiling Can Hurt Your Scalp: தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக முடி உதிர் தலை கட்டுப்படுத்தவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு.

அதாவது முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் வரும் என்ற ஒரு செய்தி உள்ளது. உண்மையில் பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் நாம் எண்ணெய் தேய்க்கலாமா அதை பற்றி பார்ப்போம்.

பொடுகு என்பது உச்சந்தலையில் உருவாகும் மலாசீசியா என்ற ஈஸ்ட் புஞ்சை என்றும் அது உச்சம் தலையில் உள்ள எண்ணெய்யை தான் உணவாக உட்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது.

எனவே பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் எண்ணெய் தடவுவது அந்த நிலையை இன்னும் தீவிரமடைய செய்யலாம். அதனால் நீங்கள் எண்ணெயை தலையில் தடவுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது கிடையாது.

தலையில் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா? சந்தேகத்திற்கான தீர்வு | Can We Apply Oil When We Have Dandruff

குறிப்பிட்ட சில எண்ணெய் தேய்ப்பதை நாம் தவிர்த்து விடலாம். அதாவது அதிக அடர்த்தி கொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை நாம் தவிர்ப்பது நல்லது.

மேலும், உங்களுடைய தலை முடி வறட்சியாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால். தலைக்கு குளிப்பதற்கு முன்பாக சிறிது எண்ணெய் தடவி பிறகு குளிக்கலாம். தொடர்ந்து தலையில் நீண்ட நேரம் எண்ணெய் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது.

தலையில் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா? சந்தேகத்திற்கான தீர்வு | Can We Apply Oil When We Have Dandruff

 

மேலும், பொடுகு வருகின்ற நேரத்தில் எதனால் பொடுகு வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலையில் அதிக அளவு அழுக்கு சேர்ந்தாலோ சரியாக தலை முடியை பராமரிக்காமல் இருந்தாலும் இவ்வாறான சிக்கல்கள் வரலாம்.

பொடுகை குறைக்கும் அதிக இரசாயனம் இல்லாத தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. சில முக்கியமான பொருட்களை பொடுகு நீக்குவதற்காக பயன்படுத்தும் பொழுது மருத்துவர் அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நன்மை தரும்.