ஜோதிட ரீதியாக சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, ஆனந்தம் வழங்கக்கூடியவர். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். கட்டாயமாக இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும்.

அந்த வகையில், செப்டம்பர் இரண்டாம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிர பகவானுடைய சொந்த ராசியின் பெயர்ச்சி மிக பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் ஒரு தாக்கத்தை கொடுக்கும். பொதுவாக, சுக்கிரன் 28 நாட்கள் ஒரு ராசிகள் இருப்பார். இந்த முறை 64 நாட்கள் இருக்க போகிறார்.

அக்டோபர் மூன்றாம் தேதி சுக்கிரன் துலாம் ராசி, வக்கிரமடைகிறார். இதனால் 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

2026 சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 64 நாட்கள் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காலம் தான் | 2026 Sept 02 Sukiran Peyarchi Astrology Prediction

மேஷம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது. அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கு உயரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த சொத்துக்களை எல்லாம் மீட்டெடுப்பீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும்.

மிதுனம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சவாலான விஷயங்களையும் நீங்கள் எளிதாக செய்து வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும்.

 

தனுசு:

இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் நற்செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை ஆடம்பரமான வாழ்க்கை அமையும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டால் இவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.

கும்பம்:

இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இருப்பினும் இவர்கள் பெயருக்கு சில கெடுதல் வர நேரலாம் என்பதால் முடிந்தவரை நட்பு வட்டாரங்களிலும் புதிய நட்புகளிலும் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.