வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாகவும், அறிவு, கல்வி, செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் குரு பகவான் கருதப்படுகிறார். குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். அதேபோல், அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.

குரு பகவானின் நிலையில் இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! | Jupiter Transit In Ayilyam Nakshatra Who Get Luck

தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார்.

புதனின் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கத் தொடங்குவதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். குறிப்பாக, 4 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் தொழில், கல்வி, நிதி நிலை உள்ளிட்ட விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.

அப்படி குருவின் ஆசியால் தொழில், நிதிநிலை, தனிப்பட்ட வாழ்க்கை என பல வழிகளிலும் அதிகளவில் சாதக நன்மைகளை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! | Jupiter Transit In Ayilyam Nakshatra Who Get Luck

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நிதிநிலை மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடியும். புதிய வழிகளில் வருமான ஆதாரங்கள் உருவாகும்.

வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், சொத்து விஷயங்களில் சாதகமான முடிவுகளும் கிடைக்கலாம். ஆன்மீகப் பயணங்கள் மன அமைதியைத் கொடுக்கும்.

கடகம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! | Jupiter Transit In Ayilyam Nakshatra Who Get Luck

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற காலம்.

வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! | Jupiter Transit In Ayilyam Nakshatra Who Get Luck

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் வெற்றிகள் குவியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். முதலீடுகளில் லாபம், வருமானத்தில் உயர்வு ஏற்படும். மாணவர்களுக்கும் சிறப்பான காலமாக இருக்கும்.

மீனம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! | Jupiter Transit In Ayilyam Nakshatra Who Get Luck

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நிதிநிலை வலுப்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்த தடைகள் நீங்கும். முக்கிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பெற்றோர் குறித்த கவலைகளும் நீங்கும்.