காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும் என கனிமொழி கூறியுள்ளார்.

காரில் இருந்து இறங்கும் ஒரு பெண் கருப்பு உடை அணிந்து, செல்வது  போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என விமர்சித்து சிலர் பதிவு போட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார். ஒரு பெண், தன் அன்றாட வாழ்க்கையை வாழும், வீடியோ ஒன்று, அரசியல் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. 

இது பிற்போக்குத்தனமான, மனநிலையை காட்டுகிறது. ஆனால், எனக்கு இதில் ஆச்சரியமில்லை. பெண்கள் குறித்து, மிகவும் இழிவான கருத்துகளைப் பேசிய, வரலாற்றை கொண்ட, ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடமிருந்து, வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றார்.

இதுகுறித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி  எம்.பி., தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

பிற்போக்குத்தனமான மனநிலை

காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலினமான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது.

பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.