இளையராஜா இசையில் வெளியாக மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல் தான் என்று சொல்வார்கள். அதே சமயம் கண்ணதாசன் – இளையராஜா இசையில் எழுதிய முதல் பாடல் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவது கண்ணதாசன். 1949-ம் ஆண்டு வெளியாள கன்னியின் காதலி படத்தில் வரும் கலங்காதிரு மனமே என்ற பாடல் மூலம் திரையுலகில் கவிஞராக அறிமுகமான கண்ணதாசன், தனது வாழ்நாளில் 4500-க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பாடல்கள் மட்டும் இல்லாமல், கட்டுரைகள், புத்தகங்கள் என பலவற்றில் தனது எழுத்து திறமையை நிரூபித்துள்ளார்.
அதேபோல், கவிஞர், எழுத்தாளர் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வந்த கண்ணதாசன், கே.வி.மகாதேவன் தொடங்கி, இளையராஜா வரை பல இசையமைப்பாளர்களில் இசையில் பாடல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடைசி பாடல், இளையராஜா இசையில் வெளியாக மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல் தான் என்று சொல்வார்கள். அதே சமயம் கண்ணதாசன் – இளையராஜா இசையில் எழுதிய முதல் பாடல் தெரியுமா?
1976-ம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான படம் அன்னக்கிளி. இந்த படம் தான் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான முதல் திரைப்படம். ‘இந்த படம் பாடல்களுக்காகவே பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்து, ‘கவிக்குயில்’, ‘பாலூட்டி வளர்த்த கிளி’, ‘உறவாடும் நெஞ்சம்’ உள்ளிட்ட படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதில் ‘பாலூட்டி வளர்த்த கிளி’ திரைப்படத்தில்தான் இளையராஜா இசையில் கண்ணதாசன் முதன்முதலில் பாடல் எழுதினார் என்று கூறப்படுகிறது.
அந்தப் படத்திற்குப் பாடல் எழுத கண்ணதாசனை அழைத்து வருமாறு தயாரிப்பாளர் கண்ணதாசனின் மகனும், அப்படத்தின் உதவி இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசனிம் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது அப்பா கண்ணதானிடம் சொல்ல, முதலில் இசையமைப்பாளர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு “இளையராஜா” என்று பதில் சொன்னவுடன், “இளையராஜாவா? அது யாரு?” என்று கண்ணதாசன் கேட்க அதற்கு, ‘அன்னக்கிளி’ படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாடல் எழுத வந்த கண்ணதாசன், இளையராஜாவை பார்த்தவுடன், “அட… நீதானா? டேய், இது ராஜாடா!” என்று கூறியுள்ளார். இளையாஜா இசை உதவியாளராக ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றியபோது கண்ணதாசன் நன்கு அறிந்திருந்தார். ஜி.கே. வெங்கடேசனும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததும் இதற்குக் காரணமாக இருந்தது. தொடர்ந்து ‘பாலூட்டி வளர்த்த கிளி’ படத்தின் முதல் பாடலான ‘கொல கொலயா முந்திரிக்கா’ பாடலுக்கு இளையராஜா இசையமைக்க கண்ணதாசன பாடல் எழுதியுள்ளார்.
“கண்ணோடு கண்ணு ரெண்டும் ஒன்னோடு ஒன்னு… கல்லும் இல்ல, முள்ளும் இல்ல, பூவிலே… கண்ணா ஓடோடி வா…” என்று வரிகளைச் சொல்லிவிட்டு, அடுத்த வரிகளை எழுதும்போது இளையராஜாவை நோக்கி, “நீ நல்லா வரணும்டா” என்று வாழ்த்தியபடி, “கண்ணா ஓடோடி வா… ராஜா வா… ராஜா வா… ராஜா வா…”என்று கண்ணதாசன் வரிகளைச் சொன்னதாக அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார். தனது இசைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் இருந்த இளையராஜாவுக்கு, முன்னணி கவிஞரான கண்ணதாசனின் அந்த வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்ததாகக் கூறப்படுகிறது.
