பிக்பாஸ் சீசன் 10 விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் சமூக வலைதலத்தில் வைரலாகி நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மக்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி, தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் பிரபலான திரை நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 9 சீசன்களை கடந்துள்ளது. கடந்த சீசனின் போது ‘இது பிக்பாஸா இல்ல சவுண்ட் பாக்ஸா’ என்று வியூவர்ஸ் கேள்வி எழுப்பும் அளவிற்கு அந்நிகழ்ச்சி இருந்தது. பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பாரு - கம்ருதீன் இருவருக்கும் ஒரே நேரத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியில் உள்ளே வந்த திவ்யா டைட்டிலை வென்றார். இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 10 எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ’பிக்பாஸ்’ நிகழ்ச்சி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிக்பாஸ் குழுவினர் சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘பிக்பாஸ் காமன் மேன்’ என்று புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 

அதாவது தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களை ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இயல்பாகவே எழும்.