நம் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகளில், உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை தரக்கூடிய ஒன்றாக சுரைக்காய் கருதப்படுகிறது.

அதிக நீர்ச்சத்து கொண்ட சுரைக்காய், உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும், குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகவும் உதவுகிறது.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க! | Tasty And Simple Sorakkai Kootu Recipe

மேலும், ஆரோக்கியமான உணவுமுறையுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, உடல் எடையை கட்டுப்படுத்துவதில் ஆற்றல் காட்டும்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களது உணவுமுறையில் சுரைக்காயை சேர்த்துக்கொள்வது சிறப்பு. சுரைக்காயை பச்சையாக சாப்பிடுவதைக் காட்டிலும், நன்கு சமைத்து சாப்பிடுவது பொதுவாக சிறந்தது.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க! | Tasty And Simple Sorakkai Kootu Recipe

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட சுரைக்காயை வைத்து, வழக்கமான சமையலிலிருந்து சற்று வித்தியாசமாகவும், சுவையாகவும் ஒரு சுரைக்காய் கூட்டு எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – 1

பாசிப்பருப்பு – ½ கப்

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையானவை

துருவிய தேங்காய் – ¾ கப்

அரிசி மாவு – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க! | Tasty And Simple Sorakkai Kootu Recipe

செய்முறை

முதலில் சுரைக்காயை நன்றாகக் கழுவி, தோலை சீவி நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும்.

அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து, மிதமான தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க! | Tasty And Simple Sorakkai Kootu Recipe

சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு வேகும் நேரத்தில், அரைக்க வேண்டிய பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், அரிசி மாவு, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்க்கவும்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் நன்றாக அரைத்து மென்மையான விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

சுரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு நன்றாக வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.பின்னர் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் கூட்டு ... இப்படி செய்து பாருங்க! | Tasty And Simple Sorakkai Kootu Recipe

இதற்கிடையில், தாளிப்பதற்காக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு,  காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர் இந்தத் தாளிப்பை சுரைக்காய் கூட்டில் சேர்த்து நன்றாகக் கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அசுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவை அற்புதமாக இருக்கும்.