எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்காக அல்லாமல், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.
கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடர்வதற்காக கார் பந்தையங்களில் பங்கேற்று வருகின்றார்.

எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் #AjithKumar
இந்நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித் குமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், முதல்வரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “ரசிகர்களாக இருந்தது போதும்” உள்ளிட்ட கருத்துகளை அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. மறுபுறம், விஜய் ரசிகர்கள் அஜித்தின் அறிக்கையை வரவேற்று, இருவருக்கும் இடையேயான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பாராட்டி வருகின்றனர்.
அஜித்தின் ஆதரவு விஜய்க்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறித்த அறிக்கை சர்ச்சை தற்போது இணையத்தில் இரு தரப்பு வாதமாக ஒருவெடுக்க ஆரம்பித்துள்ளது.

