பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கோலாகலமாக செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சண்டையும் ஆரம்பித்து விட்டது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதனைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சிறுநீரால் உருகும் இமயமலை: ஆய்வாளர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்; எவரெஸ்ட் பேஸ் கேம்பில் நடப்பது என்ன?
ஆரவ், ரித்விகா, முகன் ராவ், ஆரி அர்ஜுன், ராஜு ஜெயமோகன், முஹம்மது அசிம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன், திவ்யா கணேஷ் ஆகியோர் இதுவரை நடைபெற்று உள்ள சீசன்களில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த 10-வது சீசனில் இதுவரைக்கும் நடக்காத பல அதிரடியான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இந்நிகழ்ச்சி தொடக்க மேடையிலேயே சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அது போக வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சீசனில் 'மகாநதி’ சீரியலில் நடித்த லட்சுமி பிரியா, நடிகை ஷாதிகா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சாந்தினி தமிழரசன், நடிகர் பிளாக் பாண்டி, தொகுப்பாளர் வினோத் பாபு, நடிகர் குமரன், தொகுப்பாளர் ராகவன் ரகுநாதன், பிரித்விநாத், சீரியல் நடிகை முத்தழகி, நடிகை தன்யா, ஒப்பனை கலைஞர் அஷ்மிதா, சீரியல் நடிகர் அவினாஷ், நடிகர் முகேஷ், குக் வித் கோமாளி பிரபலம் அன்சார், சீரியல் நடிகை ஸ்வாமிதா, ஜாவித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
காமன் மேன் போட்டியாளர்களாக, முனியம்மா, ஜேசன், சமா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சீசன் 10-லும் லக்சுவரி பட்ஜெட் டாஸ்குகள் உள்ளன. இந்நிலையில், முதல் வார தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று அனைவரும் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது, முனியம்மா தன்னை எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் தேர்ந்தெடுக்குமாறு தெரிவித்தார். மேலும், சாந்தினி பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், சக போட்டியாளர்கள் கடுப்பாகினர். ஆலோசனை முடிந்ததும் பிளாக் பாண்டி முனியம்மாவை அழைத்து இப்படி பேசக் கூடாது. சபையில் ஒருவர் பேசி முடித்த பின் தான் நம் கருத்தை சொல்ல வேண்டும் என்றார். அதற்கு முனியம்மா நீங்க என்ன பாயிண்ட் பேசுனீங்க நான் கேட்காமல் வெளியே வந்தேன் என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
