தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் இருக்கும். அவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக 91 வயதில் காலமாக இருக்கிறார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலமன் பாப்பையா அவர்கள் மகாகவி சுப்பிரமணியர் பாரதியார் மறைந்த அதே தினத்தில் உயிரிழந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாலமன் பாப்பையாவிற்கு மகாகவி பாரதி குறித்து நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் இருந்திருக்கிறது.

மறைந்த சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா? | Solomon Pappaiah Last Wish Before Death

அதை தொடர்பாக அவருடைய உதவியாளர் பேசியுள்ளார். சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசையை குறித்து அவருடைய உதவியாளர் ராஜா அவர்கள் பேசுகிற பொழுது பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.

அவருக்கு வயது தற்போது 91. 3 தினங்களுக்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது அதற்காக அவர் சிவகாசி வந்திருக்கிறார் நன்றாக இருந்துள்ளார் நேற்று இரவு சற்று தூக்கம் வராமல் தவித்திருக்கிறார் இன்று காலை அவரால் மூச்சு விடவே முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் அப்போலோ அழைத்து செல்ல சொன்னார்கள். அப்போலோ சென்ற பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் சாலமன் பாப்பையா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அந்த துயரச் செய்தி தெரிவித்ததாக அவர் சொல்கிறார்.

முக்கியமாக அதைவிட முக்கியமாக சாலமன் பாப்பையா அவர்கள் கிறிஸ்துவராக பிறப்பெடுத்திருந்தாலும் அவர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தன்னுடைய உடலை அவர் இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

மேலும், சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அது எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாகவும் இருந்தது.

பாரதியாருடைய வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அது நிறைவேறும் முன்னதாகவே அவர் காலமாகி இருப்பது மிகுந்த வேதனையை தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.