ராதிகா ஆப்தே
பாலிவுட் சினிமாவில் பலவிதமான போல்ட்டான படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 3 ஆந்தாலஜியில் நடித்துள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் 3 வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், தான் நடித்த படுக்கையறை காட்சி மற்றும் முத்தக்காட்சிகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார் ராதிகா.

அதில், நான் ஆரம்பத்தில் 4, 5 படங்களில் முழுமையாக நிர்வாணமாக நடித்திருக்கிரேன். அதனால் இவங்க எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்கள் என்று நினைக்கிறார்கள். நான் அவர்களிடம், நான் ஏற்கனவே அப்படி நடித்திருக்கிறேன் என்பதற்காக இப்போது இதுபோல் நடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று சொல்கிறேன்.
தற்போது முத்தம் அல்லது நெருக்கமான காட்சியில் நடிக்கச் சொன்னால், அது கதைக்கு தேவையா என்பதை கேட்டுவிட்டுத்தான் அக்காட்சியில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்கிறேன். ஆனால் சிலர், கொஞ்சம் கொஞ்சம் என்று சொல்வார்கள். கொஞ்சம் கிஸ்ஸிங், கொஞ்சம்..15 செகண்ட் இம்ப்ரோவைஸ் என்று கூறுவார்கள். அப்போது நான், சாரி எனக்கு புரியவில்லை என்று கேட்பேன், அவர்கள் அப்படி சொல்வது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.

உள்ளாடை இல்லாமல்
இதையெல்லாம்விட மற்றொரு சம்பவம் இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டில், நீங்கள் ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்க வேண்டுமென்றார்கள். அப்போது சட்டையின் பட்டன்களை கழட்ட சொன்னார்கள். உடனே நான் இது ஆக்ஷன் காட்சிதானே, அதற்கு ஏன் சட்டை பட்டனை கழட்ட வேண்டும் என்றேன்.
அதற்கு அவர்கள், இந்த சண்டை காட்சியில் நீங்கள் சட்டை பட்டனை கழட்டிவிட்டு உள்ளாடையுடன் மட்டுமே சண்டைப்போட வேண்டும் என்றார்கள். இதைக் கேட்டதும் இதன்மூலம் என்ன சாதிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்டேன்.

அப்படத்தின் பெயரை இப்போது என்னால் சொல்ல முடியாது, நான் சொன்னால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஏனென்றால், அந்த மாதிரியான காட்சி அப்படத்தில் இல்லை. அந்த காட்சியில் நான் நடிக்கவில்லை. ஒரு நடிகர் ஏற்கனவே சில நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார் என்பதற்காக, தொடர்ந்து அதே மாதிரியான காட்சிகளில் நடிக்க சம்பதிப்பார் என்று நினைக்கக்கூடாது.
அந்த காட்சி ஒரு கதைக்கு ஏன் தேவை, அதன் நோக்கம் என்ன என்பதை இயக்குநர்கள் தெளிவாக விளக்க வேண்டும். ஒரு படம் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் விருப்பத்தையும் தனிப்பட்ட எல்லைகளையும் மீறி அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று ராதிகா ஆப்தே வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
