உடல் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். ஆனால், உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தாலும், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பது பலருக்கும் சவாலாகவே உள்ளது.

உடல் எடையை சீராகக் கட்டுப்படுத்துவதில் சரியான உணவுமுறைக்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில், புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ராஜ்மா, ஆரோக்கியமான உணவாகும்.

தொப்பை குறையணுமா? தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலாவை முயர்ச்சி செய்து பாருங்க! | Dhaba Style Rajma Masala Recipe For Weight Loss

குறிப்பாக, இதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுகிறது. எனவே, சுவையும் சத்தும் நிறைந்த ராஜ்மாவை வைத்து, தாபா பாணியில் அசத்தலான ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிவப்பு ராஜ்மா – 1 கப்

தண்ணீர் – 3 கப்

உப்பு – 1/2 தேக்கரண்டி

கடலை எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

நெய் – 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 1/2 தேக்கரண்டி

பட்டை – 1 இன்ச் துண்டு

கிராம்பு – 4

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 1/2 கப்

உப்பு – 1/2 தேக்கரண்டி

இஞ்சி – 1 இன்ச் துண்டு

பூண்டு – 8 பல்

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மல்லித் தூள் – 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி

சன்னா மசாலா – 1 தேக்கரண்டி

கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு 

பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி

தொப்பை குறையணுமா? தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலாவை முயர்ச்சி செய்து பாருங்க! | Dhaba Style Rajma Masala Recipe For Weight Loss

 

செய்முறை

ராஜ்மாவை நன்றாகக் கழுவி, 5–6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, ராஜ்மாவை குக்கரில் சேர்க்கவும்.

அதனுடன் 3 கப் தண்ணீர் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து, மிதமான தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். குக்கரில் உள்ள அழுத்தம் தானாக இறங்கியதும், வேகவைத்த ராஜ்மாவைத் தனியாக எடுத்து வைக்கவும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கி, சீரகம், பட்டை மற்றும் கிராம்பு சேர்க்கவும். சுமார் ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

தொப்பை குறையணுமா? தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலாவை முயர்ச்சி செய்து பாருங்க! | Dhaba Style Rajma Masala Recipe For Weight Loss

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாகப் பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

இதற்கிடையில், இஞ்சி, பூண்டு, தக்காளி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

இந்த விழுதையும் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போய் ஈரப்பதம் வற்றும் வரை நன்றாக வதக்கவும். இப்போது மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், பெருங்காயத் தூள் மற்றும் சன்னா மசாலா சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கிளறிவிட வேண்டும்.

தொப்பை குறையணுமா? தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலாவை முயர்ச்சி செய்து பாருங்க! | Dhaba Style Rajma Masala Recipe For Weight Loss

வேகவைத்த ராஜ்மாவில் இருந்து ஒரு கரண்டி அளவு ராஜ்மாவையும் சிறிதளவு வேகவைத்த நீரையும் சேர்த்து, கரண்டியால் லேசாக மசிக்கவும்.இது கிரேவிக்கு நல்ல கெட்டியான பதத்தைக் கொடுக்கும்.

இப்போது மீதமுள்ள ராஜ்மாவையும், தேவையான அளவு வேகவைத்த நீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கிரேவியை மிதமான தீயில் 5–7 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். 

இறுதியாக கசூரி மேத்தியை லேசாகக் கசக்கி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் இஞ்சியைத் தூவவும். ஒரு முறை கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கினால் அவ்வளவு தான்,  தாபா ஸ்டைலில் அசத்தல் சுவையில் ராஜ்மா கிரேவி தயார்.