பிரித்தானியாவின் டான்காஸ்டர் அருகே அமைந்துள்ள யார்க்ஷையர் வனவிலங்கு பூங்காவில், புலிகள் அடைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் சைபீரியன் புலியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பொதுமக்கள் பார்வையிடும் பகுதியிலிருந்து புலிகள் வசிக்கும் பகுதிக்குள் குதித்த அவரை, பூங்கா அதிகாரிகள் மீட்டு மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுத்தபோதும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

புலி தாக்கி ஒருவர் பலி - பிரித்தானிய வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்! | Man Dies After Entering Tiger Enclosure At Uk

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட புலிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அது பாதுகாப்பாகக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு யார்க்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பூங்காவிலிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், பொதுமக்களுக்கு நேரடி ஆபத்து இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.