தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் என்று அழைக்கப்படும் தேவா(75) சென்னையில் இன்று காலமானார்.

இசையமைப்பாளர் தேவா

மனசுக்கேற்ற மகராஜா திரைப்படத்தின் மூலமாக 1986ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது கானா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து மிகவும் பிரபலமாகியுள்ளது.

மாரடைப்பினால் இசையமைப்பாளர் தேவா காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகினர் | Music Director Thenisai Thendral Deva Passes Away

இந்நிலையில் இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. காலை எழுந்ததும் நெஞ்சு வலிப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளாராம். பின்பு குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தனது இசைமைப்பினால் உலகப்புகழ் பெற்ற தேவாவின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..