ஜோதிட சாஸ்திஜரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இவர் ரிஷபம், துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது நிலையை மாற்றுவதால், அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கம் ஏற்படும்.

சுக்கிரன் உதயம் - அக்டோபர் 29 முதல் செல்வமும் செழிப்பும் பெறப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Rise In Libra Who Get Huge Money

தற்போது துலாம் ராசியில் அஸ்தமன நிலையில் பயணிக்கும் சுக்கிரன், அக்டோபர் 29ஆம் தேதி உதயமாகவுள்ளார். இதனால் தொழில் மற்றும் நிதிப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்தவர்கள் நல்ல முன்னேற்றத்தையும் நிதி ஆதாயத்தையும் பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 அப்படி சுக்கிரனின் உதயத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு  தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

சுக்கிரன் உதயம் - அக்டோபர் 29 முதல் செல்வமும் செழிப்பும் பெறப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Rise In Libra Who Get Huge Money

துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உதயமாவதால், இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது.

வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்களின் திறமையும், செயல்திறனும் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் மூலமாகவும் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.

குறிப்பாக, நீண்ட காலமாகப் பணப் பிரச்சினைகளைச் சந்தித்து வருபவர்களுக்கு, அந்தப் பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். 

கடகம்

சுக்கிரன் உதயம் - அக்டோபர் 29 முதல் செல்வமும் செழிப்பும் பெறப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Rise In Libra Who Get Huge Moneyகடக ராசியின் நான்காவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

பணியிடத்தில் நீண்ட காலமாகக் கடினமாக உழைத்து வந்தவர்களுக்கு, அதற்கான நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இதனால் அவர்களின் வருமானம் அதிகரிக்கக்கும். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, பணத்தைச் சிக்கனமாகச் செலவிடுவது அவசியம். 

கன்னி

சுக்கிரன் உதயம் - அக்டோபர் 29 முதல் செல்வமும் செழிப்பும் பெறப்போகும் டாப் 3 ராசிகள்! | Venus Rise In Libra Who Get Huge Money

கன்னி ராசியின் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால், இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

தற்போதைய வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, தங்களுக்குப் பொருத்தமான புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதேபோல், நீண்ட காலமாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்குக் கூட நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கலாம். மேலும், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நன்கு சிந்தித்துச் செய்யும் நிதி முதலீடுகள், பின்னர் நல்ல பலன்களைத் தரும்.