இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், திருமணத்துக்குப் பின்னர் கணவர் வீட்டுக்குச் செல்ல 18 கிலோமீட்டர் தூரம் நடந்த மணப்பெண், தனது கிராம மக்களின் அடிப்படைப் பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

புல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளாவுக்கு கடந்த 20ஆம் திகதி அனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கணவர் வசிக்கும் உண்டாவா கிராமத்துக்குச் செல்ல முறையான வீதி வசதி இல்லாததால், உறவினர்களுடன் சுமார் இரண்டரை மணி நேரம் அவர் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

கணவர் வீட்டிற்கு 3 மணி நேரம் நடந்தே சென்ற மணப்பெண்! என்ன காரணம்? | Bride Walks 3Hrs To Reach Husband Home Video Viral

 

வீதியின்றித் தவிக்கும் கிராமங்கள்!

இதனைத் தொடர்ந்து, வீதி வசதியின்றி தவிக்கும் கிராம மக்களின் சிரமங்களைப் போக்க, உரிய வீதிகளை அமைத்துத் தருமாறு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் ஷர்மிளா கோரிக்கை விடுத்துள்ளார்.

மலைக்கிராமங்களில் வீதி வசதிகள் இல்லாததால், மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இதற்கிடையில், திருமணக் கோலத்தில் ஷர்மிளா நடந்துசெல்லும் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுதந்திரமடைந்து பல ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வீதி வசதிகள் இல்லாதிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அதனால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து நெட்சன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.