தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து அரசியலில் இறங்கி அதிலும் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிவிட்டார்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தான் அவர் இருக்கும் வரை முதல்வர் என அவர் கட்சியை சார்ந்தவர்கள் தொடர்ந்து பேசிகொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஒரு மேடையில் பேசுகையில், யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும், டெல்லியில் முகாம் போடட்டும், எல்லோரும் தலைவர்(விஜய்) போல் வர முடியாது என கூற, தனுஷ் ரசிகர்களை இது மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
ஏனெனில் தனுஷ் விரைவில் கட்சி ஆரம்பிக்கவுள்ளார், டெல்லியில் சில அரசியல் பிரபலங்களை சந்தித்தார் என சில செய்திகள் உலா வர, அதற்கு தான் அமைச்சர் ஆத்வ் இப்படி பேசினார் என சிலர் கூறி வருகின்றனர்.
