இதில் என்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்ட முயல்வது போல் தோன்ற நான் விரும்பவில்லை. அது ஒரு வகையில் என் எல்லையை மீறிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி திரைப்படத்தில் ஜான்வி கபூர் கேரக்டர் சித்தரிக்கப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலையில், இந்த அவமானத்தை நான் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
காரன் ஜோஹரின் 'காஃபி வித் காரன்' நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட்டில், பங்கேற்ற நடிகை ஜான்வி கபூரில் கேள்வி எழுப்பிய கரண் ஜோஹர், கடந்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் உனக்கு ஏற்பட்ட இணையக் கேலி, கிண்டல்கள் அனைத்தையும் சமாளிப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். ஜான்வி கபூர் கவர்ச்சியானவர் என்பது அனைவருக்கும் தெரியும்; கவர்ச்சியாக இருப்பதற்கும், ஆபாசமாகச் சித்தரிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அப்படி இருக்க, 'பெத்தி' சர்ச்சையின் போது என்ன நடந்தது? அது நடந்த அன்று நான் உன்னிடம் பேசியதால், அது உன்னை பல வழிகளில் பாதித்தது என்பதை நான் அறிவேன்," என்றார்.
அப்போது அதற்கு குறுக்கிட்ட ஜான்வி, "அந்தச் செயல்முறை முழுவதிலும் நீங்கள் என்னுடன் பேசினீர்கள்," என்றார். தொடர்ந்து பேசிய கரண், மக்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்தனர்: ஒரு தரப்பினர் அவரது கேரக்டர் சித்தரிப்பில் நடந்த ஆபாசத்தன்மைக்கு அனுதாபம் தெரிவித்தனர்; மற்றொரு தரப்பினரோ, 'ஓ, ஆனால் அவர் அந்தப் படப்பிடிப்பில்தானே இருந்தார். ஏன் அதைத் தடுக்கவில்லை?' என்று கேட்டனர். இதைப் பற்றி நீ என்ன நினைத்தாய்? என கேட்டார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்த ஜான்வி கபூர், "நான் பல விஷயங்களை உணர்ந்தேன். இதைப் பற்றிப் பேச நான் தயங்கியதற்குக் காரணம், அந்தத் திரைப்படத்தில் பலர் கடுமையாக உழைத்துள்ளனர். மேலும் என்ன சொல்வது என்றோ அல்லது உண்மையில் சொல்வதற்கு ஏதேனும் இருக்கிறதா என்றோ எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தத் தவறில் நான் பாதி பொறுப்பை ஏற்றுக்கொள்வது முக்கியம். ஏனென்றால், அதுபோன்ற ஒரு எதிர்மறையான தாக்கமும், கதை சொல்வதும் நம் சமூகத்தில், குறிப்பாக எனது பாலினத்திற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு எனது மனசாட்சியை பெரிதும் உறுத்துகிறது.
அந்த அவமானத்தை நான் எப்போதும் சுமப்பேன். என்னால் இன்னும் அதிகமாகச் செய்திருக்க முடியுமா? நான் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க முடியுமா? நான் இதை ஒரு பெரிய பிரச்சனையாக்கி இருக்க முடியுமா? என்றால் நூறு சதவீதம், முடியும். ஆனால் அது சிக்கலானதுதானா? அது தீவிரமாகப் பெண்களைப் பண்டமாக்கும் செயலா? அது கதையின் வழியே பாலியல் வன்கொடுமையை ஊக்குவிப்பதாக அமைந்ததா? என்றால் அமைந்தது தான் என்றார்.
தொடர்ந்து ஜான்வி கூறுகையில், "இது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம். 'நான் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். பெரிய பிரச்சனை ஆக்கியிருக்க வேண்டும்' என்று என்னை நானே நொந்துகொள்ளும் கட்டங்களைக் கடந்து வந்தேன். மீண்டும் சொல்கிறேன், பழியை வேறு யாரோ மீது சுமத்துவது போல் இருக்கும் என்பதால் எனக்கு இதைச் சொல்லப் பிடிப்பதில்லை, ஆனால் 'இயக்குனர் என்ன சொன்னாலும், நீங்கள் தொழில்முறையோடு நடந்துகொள்ள வேண்டும், இயக்குனர் சொல்வதைக் கேட்க வேண்டும்' என்பது எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும்.
எனவே, தகவல்கள் எனக்குக் கிடைக்கக் கிடைக்க, விஷயங்களை எப்படிச் சற்றே சிக்கலில்லாமல் மாற்றுவது என்பதில் நான் முடிந்தவரை கவனம் செலுத்தினேன். ஏனென்றால் தென்னிந்தியா முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதை இருப்பது அரிது, மேலும் கேமரா கோணங்கள் எங்கே இருக்கும் என்பதை அந்தத் திரைக்கதைகளில் நீங்கள் காண்பது மிக அரிது. ஆனால் அதையெல்லாம் மீறி, என் தரப்புப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் ஒரு பெரிய இடம் என்ற பின்னணியில் இருந்து வருகிறேன். அதை நான் சாதகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும், ஏனென்றால் நான் எப்படி இருந்தாலும் நான் பெரிய இடம் என்பது விமர்சிக்கப்படத்தான் போகிறேன். எனவே, அதை நான் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கரண், திரைப்பட தயாரிப்பாளர்/இயக்குனர் உன்னைக் கைவிட்டுவிட்டதாக உணர்ந்தாயா? அந்த நேரத்தில் ஏமாற்றமடைந்தாயா அல்லது அவர் வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் விஷயங்கள் வெளிவந்த விதம் அப்படி அமைந்துவிட்டது என்று உணர்ந்தாயா? என்று கேட்க இதற்குப் பதிலளித்த ஜான்வி, "கடவுளே, இதைப் பற்றிப் பேசும்போது நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது, ஏனென்றால் இதில் என்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்ட முயல்வது போல் தோன்ற நான் விரும்பவில்லை. அது ஒரு வகையில் என் எல்லையை மீறிய அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தில், ஜான்வி கபூரின் அட்சியம்மா கேரக்டர் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து இந்தச் சர்ச்சை வெடித்தது. அந்தக் கேரக்டரின் ஆபாசமான சித்தரிப்புக்கு பல பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் காட்சிகளும் நடன அமைப்பும் வரம்பு மீறி பெண்ணைப் காட்சிப்பொருளாக மாற்றுவது என வாதிட்டனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, சங்கடத்தை உணர்ந்த இயக்குனர் புச்சி பாபு சனா மன்னிப்பு கேட்டார், மேலும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் கூறினார்.
