மதுமிதா

சன் டிவி-ல் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மதுமிதா. இதை தொடர்ந்து விஜய் டிவி-ல் அய்யனார் துணை சீரியல் நிலா என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். Pookie Ponnamma என்ற ஆல்பத்தில் நடித்து வீடியோ ட்ரெண்ட்டானது.

இந்நிலையில் சமீபத்தில் மதுமிதா அளித்த பேட்டியொன்றில் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார்.

 

பிக்பாஸ் ஆஃபர்

அதில், எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்ததில்லை, வந்தாலும் நான் போகமாட்டேன். என்னால சண்டை எல்லாம் போட முடியாது.

நான் தப்பா, சரி என்னை விட்டுருமா என்ன என்று சொல்லிவிடுவேன், அதனால் நான் போகமாட்டேன். முதல் நாள்லயே என்ன விட்டுருங்கன்னு சொல்லிவிடுவேன், நான் கப் ஆஃப் டீ என்று ஓபனாக பேசியிருக்கிறார் மதுமிதா.