ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பூசணி விதையினை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பூசணி விதைகள்

இன்றைய காலத்தில் மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு சத்தான உணவுகளில் ஒன்று தான் பூசணி விதை ஆகும். பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருக்கின்றது.

ஆதலால் தினசரி இதனை உணவில் சேர்க்கும் போது, உடலின் செயல்பாடு சீராக இருப்பதுடன், உடலில் பல அற்புதமான மாற்றத்தினையும் காணலாம்.

அவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் பூசணி விதையினை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினை தெரிந்து கொள்வோம்.

உடல் எடையை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? பூசணி விதை செய்யும் அற்புதம் | Pumpkin Seeds 30 Days Regular Eating Benefits

நன்மைகள் என்ன?

பூசணி விதையில் உள்ள மக்னீசியம் இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகின்றது. இதனால் இதய நோயின் அபாயமும் குறைக்கின்றது. இவற்றில் உள்ள உன்சாச்சுரேட்டட் கொழுப்பு இதயத்திற்கு நன்மை அளிக்கின்றது.

பூசணி விதையில் இருக்கும் இரும்புச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தினை சீராக செயல்பட வைக்கின்றது. அடிக்கடி நோய் தாக்கபடாமலும், காயங்களை விரைவில் குணப்படுத்தவும் உதவுகின்றது.

உடல் எடையை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? பூசணி விதை செய்யும் அற்புதம் | Pumpkin Seeds 30 Days Regular Eating Benefits

மேலும் ஆண்களுக்கு கருவுறுதல் திறனை அதிகரிக்கின்றது. ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கவும் உதவுகின்றது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பூசணி விதை உதவியாக இருக்கின்றது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து தேவையற்ற உணவுகள் மீது நாட்டம் கொள்ளாமல் இருப்பதால் உடல் எடையும் குறைக்க முடிகின்றது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்பட்டாலும், அதிகளவில் கலோரிகளும் உள்ளது.

உடல் எடையை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? பூசணி விதை செய்யும் அற்புதம் | Pumpkin Seeds 30 Days Regular Eating Benefits

பூசணி விதையிலுள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் என்ற சேர்மமானது ஹார்மோனை போன்தாகும். அவை மார்பக புற்றுநோயின் அபாயத்தினைக் குறைக்கின்றது. 

இரவில் நல்ல தூக்கத்தினை பெறவும் உதவி செய்கின்றது. இதிலுள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தினை ஊக்குவிக்கின்றது.

உடல் எடையை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? பூசணி விதை செய்யும் அற்புதம் | Pumpkin Seeds 30 Days Regular Eating Benefits