How to make lemons stay fresh longer: பொதுவாகவே அன்றாட வாழ்க்கையில், சமையல் முதல் பானங்கள் தயாரிப்பது வரை எலுமிச்சை பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வாங்கிய எலுமிச்சையைச் சரியாகச் சேமிக்காவிட்டால் சில தினங்களிலேயே உலர்ந்து  பழத்தில் உள்ள சாறு குறைந்துவிடும்.

குறிப்பாக, பாதியாக வெட்டிய எலுமிச்சையைப் பாதுகாப்பது பலருக்கும் சிரமமாக இருக்கும். எனவே, எலுமிச்சையை நீண்ட நாட்கள் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
 

முழு எலுமிச்சையை எப்படிச் சேமிப்பது?

எலுமிச்சையை அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் சுமார் ஒரு வாரத்தில் உலரத் தொடங்கலாம். அதனால், நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.

எலுமிச்சையை நேரடியாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், காற்றுப் புகாத மூடியுள்ள கொள்கலனில் போட்டு வைப்பது அவசியம்.இதனால் அதன் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு, பழங்கள் விரைவில் உலர்வது தடுக்கப்படும்.

பச்சையாக இருக்கும் எலுமிச்சையைச் சிறிது நேரம் வெளியில் வைத்திருக்கலாம். அவை மஞ்சள் நிறமாக மாறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது.

பாதி வெட்டிய எலுமிச்சையையும் நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம் - இதோ எளிய வழிகள்! | Best Way To Keep Lemons Fresh For A Whole Month