இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர் மடு பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியா - தமிழ்நாடு, கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று அதிகாலை 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.
வருகை தந்த இருவரையும் தந்தையார் ஊடா மடு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்