தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 3-வது அலை வீசி வருகிறது. அங்கு தற்போது, இந்த நோய்த்தொற்றால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து உள்ளது. 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 104 பேரின் உயிரை இந்த கொடூர வைரஸ் பறித்தது.


கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ள நிலையில் மீண்டும் டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதுபற்றி அவர் கூறுகையில், டெல்லியில் கொரோனாவின் 3-வது அலை உச்சத்தில் உள்ளது. ஆயினும் இனி மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பு இல்லை. ஊரடங்கால் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது. பொதுமக்கள் முக கவசம் அணிவதன் மூலம் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.