மாத்தறை - தங்கல்ல பிரதான வீதியின் எலியகந்த பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தக்காலி எடுத்துச் சென்ற லொறி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற பின்னர் 20 நிமிடங்கள் போராடி லொறியில் சிக்கியிருந்த ஓட்டுனரை வௌியில் எடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஓட்டுனர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மாத்தறை, பண்டத்தர பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.