ரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் வரும் 30-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை கோப்பு படம் சென்னை: ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் (நவம்பர் 30ந் தேதி) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30ந் தேதி காலை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் 30ந் தேதி நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது. மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி நடத்த உள்ள ஆலோசனையில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் வரும் 30-ம் தேதி ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை
- Master Admin
- 28 November 2020
- (415)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2021
- (634)
கமலுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி !...
- 19 October 2020
- (620)
மெட்ரோ ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகி...
- 08 December 2020
- (460)
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத...
யாழ் ஓசை செய்திகள்
மலேரியா தொற்றால் ஒருவர் யாழ் போதனாவில் பலி
- 10 August 2025
சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த வன்முறை! இலங்கையர் ஒருவர் பலி
- 10 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
சினிமா செய்திகள்
தனி தீவு வாங்கி சொகுசாக வாழ்ந்து வரும் 39 வயது நடிகை..
- 10 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.