கவுகாத்தி: நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த அரசின் உத்தரவை, அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நாய் இறைச்சி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால், சிக்கிம் போன்ற மாநிலங்கள் நாய் இறைச்சிக்கு தடை விதித்துள்ளன. சமீபத்தில் நாகாலாந்து அரசும் கடந்த ஜூலை 2ம் தேதி நாய் இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்தது. அதில், நாய் இறைச்சியை வணிக நோக்கில் இறக்குமதி செய்தல், உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.
மேலும், நாய்கள் இறைச்சி தடை தொடர்பாக அரசின் உத்தரவை எதிர்த்து, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், செப். 14ம் தேதிக்குள் நாகாலாந்து அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்காததால், அரசின் தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
நாய் இறைச்சி தடை உத்தரவு நிறுத்திவைப்பு
- Master Admin
- 29 November 2020
- (546)

தொடர்புடைய செய்திகள்
- 03 August 2024
- (399)
ஆண்கள் கட்டாயம் ஏலக்காய் சாப்பிட வேண்டும...
- 03 November 2023
- (1268)
வெறும் வயிற்றில் இந்த இலைகள் செய்யும் அற...
- 23 March 2021
- (842)
பிரித்தானியாவில் மர்மமான முறையில் மாயமான...
யாழ் ஓசை செய்திகள்
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
- 01 July 2025
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை
- 01 July 2025
இன்று முதல் Seat belt அணிவது கட்டாயம்!
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.