தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வரை 756 குடும்பங்களை சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும், 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புரெவி புயல் - யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரம்
- Master Admin
- 03 December 2020
- (374)

தொடர்புடைய செய்திகள்
- 27 October 2024
- (69)
ஆழ்மன ஆசைகள் நிறைவேறணுமா? தூங்கும் போது...
- 04 June 2025
- (252)
ஜூன் 05 முதல் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்...
- 07 June 2025
- (141)
இந்த மாதம் பிறந்த பெண்கள் கணவரை தாங்கும்...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.