பிரித்தானியாவில் 12 வயது அகதி பள்ளி மாணவி ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி கிரேட்டர் மான்செஸ்டர் புரியில் உள்ள இர்வெல் நதியில் மூழ்கி சுக்ரி அப்தி என்ற அகதி பள்ளி மாணவி இறந்தார்.
தன்னை கொடுமைப்படுத்திய சிறுமிகளால் அவர் தண்ணீருக்குள் தள்ளப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியதுடன், இனவெறி காரணமாக அவரது மரணத்தை முறையாக விசாரிக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.
மேலும், சுக்ரி அப்தி மரணம் தொடர்பாக குற்றவியல் விசாணை முன்னெடுக்க வேண்டும் என போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து, சுகரி அப்தி மரணம் தொடர்பாக உயர் ஆணையம் விசாரணை குழு விசாரணை நடத்தியது.
வழக்கு தொடர்பான விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை மான்செஸ்ட் நார்த் விசாரணை குழுவின் மூத்த விசாரணையாளர் ஜோன் கியர்ஸ்ஸி தீர்ப்பளித்தார்.
விசாரணையில் சம்பவத்தன்று சுக்ரி மற்றொரு குழந்தையுடன் விருப்பத்துடன் தண்ணீருக்குள் நுழைந்ததைக் கண்டறிந்தோம்.
ஆனால் அந்த குழந்தை அப்பாவி என ஜோன் கியர்ஸ்ஸி தெரிவித்துள்ளார்.