புதுவையில் நேற்று ஆயிரத்து 465 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 7, காரைக்காலில் 12, ஏனாமில் ஒருவர், மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் தற்போது 90, காரைக்காலில் 7, ஏனாமில் 9, மாகியில் 98 பேர் நோய் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுவையில் 15, காரைக்காலில் 8, ஏனாமில் ஒருவர், மாகியில் 24 பேர் என மொத்தம் 48 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 406 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 204 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 420 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 62, காரைக்காலில் 45, ஏனாமில் 4, மாகியில் 52 பேர் என 163 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் தற்போது 367 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 617 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இந்நிலையில் நேற்று புதுவையில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 517 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்தகவல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியிருந்தனர். இந்தநிலையில் இன்று 2 பேர் பலியாகி இருப்பது பொதுமக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.