மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் கௌரவ பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும் பிரதமர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
அதன் காரணமாக இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதிலளித்த கௌரவ பிரதமர் ஏற்கனவே அது தொடர்பில் கௌரவ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கௌரவ பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு அறிவுறுத்தல்
- Master Admin
- 11 December 2020
- (369)

தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (668)
புதிய கொரோனா தொற்றாளர்கள் குறித்த அறிவிப...
- 15 February 2025
- (249)
2025-ல் அபூர்வ கேது பெயர்ச்சி- தொழிலில்...
- 16 February 2021
- (385)
முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகியதில்...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.