இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.