ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்று இன்று (16) இரவு 9 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஜீப் வண்டி அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது வட்டவளை பகுதியில் வைத்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த ஜீப் வண்டியை செலுத்தியவர் அக்கர்ப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
35 அடி பள்ளத்தில் பாய்ந்த ஜீப் வண்டி!
- Master Admin
- 17 December 2020
- (469)

தொடர்புடைய செய்திகள்
- 07 December 2020
- (546)
மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
- 02 October 2024
- (71)
இந்த திகதிகளில் பிறந்த பெண்களை அனைவருக்க...
- 03 March 2021
- (462)
இன்று இதுவரையில் 335 பேருக்கு கொரோனா
லைப்ஸ்டைல் செய்திகள்
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.