சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 04 இலட்சத்து 51 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 கோடி 70 இலட்சத்து 09 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 07 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய கொரோனா தொற்றினால் 17 இலட்சத்து 64 ஆயிரத்து 349 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில்  உள்ளது.

அங்கு இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 94 இலட்சத்து 33 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.