கொரோனா வைரஸ் பதட்டம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தான் ஒரு சில தளர்வுகள் ஏற்பட்டு சில கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் சலூன் கடைகள் மிக சமீபத்தில்தான் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது மீண்டும் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மீண்டும் சலூன் கடைகள் அடைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும் தங்கள் குடும்பத்தினருக்கும் முடி வெட்டி கொண்ட வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது தமிழ் திரைப்பட ஹீரோ ஆதி தனது தந்தைக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த வீடியோவில் அவர் தந்தைக்கு முடி வெட்டி விட்டு அழகு பார்க்கும் போது, தந்தை அவருக்காக பணம் கொடுத்தார். முதலில் அந்த பணத்தை வேண்டாம் என்று ஆதி மறுக்கிறார். ஆனால் தந்தை வலுக்கட்டாயமாக பணம் கொடுக்க முயற்சிக்கும் போது தந்தையின் மணிபர்சை பிடுங்கி அதில் இருந்து அவரே ஒரு தொகையை எடுத்துக் கொள்வது போன்ற காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது