சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத பஸ் வண்டிகள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடைய 68 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், சரியான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத சுமார் 50 பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.