அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 163 கொரோனா பரிசோதனை முடிவுகளில் 1,856 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் 1,577 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22 ஆயிரத்து 988 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று உச்சநிலையாக 1,856 பேராக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று- ஒரே நாளில் 1,856 பேர் பாதிப்பு
- Master Admin
- 02 January 2021
- (491)

தொடர்புடைய செய்திகள்
- 30 September 2023
- (214)
உங்களது வேண்டுதல் முழுமையாக நிறைவேற வேண்...
- 02 April 2025
- (133)
இளநீர் குடித்தால் இந்த 2 நன்மைகள் கிடைத்...
- 10 August 2023
- (263)
தூக்கத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட என்ன...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.