நேற்றைய தினம் (09) நாடு பூராகவும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொஸ்பெலவத்த பகுதியில் இருந்து வானொலுவாவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் ரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய நபர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பொல்கஹமுல்ல சந்தியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 70 வயதுடைய அடையாளம் தெரியாத நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
ராகல பொலிஸ் பிரிவின் ஹைபொரஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வாகன விபத்துக்களில் 5 பேர் பலி
