இப்ப நடிச்சிருக்கிற மலையாள வரலாற்றுப் படத்துல நான் வில்லன். அதனால, எனக்கு இன்னொரு வரலாற்றுப் படத்துல ஹீரோவா நடிக்கணும்.

''நடிகர்கள் சரியான வாய்ப்புகள் இல்லாதபோது டிப்ரஷனுக்குப் போய்டுவாங்கன்னு சொல்லுவாங்க... நீங்களும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் ரொம்ப நாள் இருந்தீங்க... அந்த நாள்களை எப்படிக் கடந்து வந்தீங்க?''

''நான் தமிழ்நாடு அண்டர்-17 டீம்ல கிரிக்கெட் விளையாடியிருக்கேன். கிரிக்கெட்தான் என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர். கிரிக்கெட் விளையாடும்போது நமக்கான பட வாய்ப்புகள் வரலை, ஈ.எம்.ஐ கட்டணும், வீட்ல பிரச்னைன்னு எதுவும் மனசுல இருக்காது. வர்ற பந்தை எப்படி சந்திக்கணும்னு மட்டும்தான் ஃபோகஸ் இருக்கும். அந்த மொமன்ட்ல இருப்போம். அதனால கிரிக்கெட்தான் எனக்கான மோட்டிவேஷன்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிளப் மேட்ச்ல செஞ்சுரி அடிச்சேன். அந்த ஃபீல் நல்லாருந்தது. ஏன்னா, அந்தச் சமயத்துல எனக்குப் பட வாய்ப்புகள் குறைவாதான் வந்தது. அதுவும், எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. அதனால, ரொம்ப டிப்ரஷன்ல இருந்தேன். அப்போ நான் அடிச்ச செஞ்சுரி எனக்குக் கொஞ்சம் ஆறுதலா, எனக்கான நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அந்த செஞ்சுரிக்குப் பிறகு, நிறைய நல்ல விஷயங்கள் நடந்தது. அதனால, எனக்கு என் வாழ்க்கையில அந்த 100 எப்பவும் ஸ்பெஷல்!"

''உங்கள் கனவு கேரக்டர்...?''

"இப்ப நடிச்சிருக்கிற மலையாள வரலாற்றுப் படத்துல நான் வில்லன். அதனால, எனக்கு இன்னொரு வரலாற்றுப் படத்துல ஹீரோவா நடிக்கணும். உண்மையைச் சொல்லணும்னா, 'பொன்னியின் செல்வன்' படத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அப்புறம், யாருடைய பயோபிக்லயாவது நடிக்கணும், செம மாஸா ஒரு வில்லன் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசையிருக்கு."

"அந்த செஞ்சுரிதான் என் வாழ்க்கையில ஸ்பெஷல்!" - அசோக்செல்வன் பகிர்வுகள்