நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தில் பூங்கொடியாக நடித்து பலரைக் கவர்ந்தார். மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். 

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். 2013-ம் ஆண்டு பட்டம் போலே திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

பின்னர் உலகப் புகழ் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் ‘பியாண்ட் தி கிளவ்ட்ஸ்’ படத்தின் மூலம் இந்திக்குச் சென்ற மாளவிகா மோகனன் 2019-ம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மாஸ்டர் வெற்றிப்படமாகி இருப்பதால் மாளவிகா மோகனன் சந்தோஷத்தில் இருந்தாலும் ஃபஹத் பாசிலுடன் அவர் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் துல்கர் சல்மான் படத்துக்குப் பின்னர் 2015-ம் ஆண்டு ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கிடைத்தது. 

அந்தப் படத்தில் அவர் பழங்குடியின பெண்ணாக நடித்து வந்ததாக கூறப்படுகிறது.

20 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மாளவிகா மோகனன் வருத்தமடைந்துள்ளார். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கோபமாக பேசும் காட்சிகளை வைத்து அவரை பங்கம் செய்து மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இது தான் எல்லை என்று இல்லாமல் சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளுகின்றனர். 

போன வருடம் இப்படித்தான் சமுத்திரகனி மாட்டிக்கொண்டு அவதிப்பட்டார். 

 

இந்நிலையில், இந்த வருடம் மாஸ்டர் மாளவிகா மோகனன் மாட்டிக்கொண்டிருக்கிறார்.