ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம், கடந்த ஞாயிறு அன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

சமந்தா உட்கார்ந்தபடி கண்ணை மூடிக்கொண்டு யோகா செய்வதும் அவர் அருகில் அவரது செல்ல நாய்க்குட்டி இருப்பதுமான புகைப்படம் சமந்தாவின் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படத்தை சமந்தாவின் ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும், சமந்தாவின் யோகா புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது