ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 277 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 206 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 209 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று 5 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,549 ஆக இருந்து வருகிறது. தற்போது உடல்நலக்குறைவால் 46 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமனில், கொரோனாவால் 277 பேர் பாதிப்பு
- Master Admin
- 18 February 2021
- (480)

தொடர்புடைய செய்திகள்
- 27 August 2023
- (234)
உடல் சூட்டை தணிக்க இந்த உணவுகளை எடுத்துக...
- 24 January 2024
- (242)
கணவன்- மனைவி உறவை பலப்படுத்தும் பரிகாரங்...
- 15 March 2021
- (496)
மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான போராட்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.