தெலுங்கு நடிகை நிதி அகர்வால் பூமி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள அவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி உள்ளனர். இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகை நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போய் உள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய சேவை செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். 

நிதி அகர்வால் வெளியிட்ட அறிக்கை

அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயிலை, ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் இடமாகவும், கல்விக் கூடமாகவும் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.